புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியைக்கு மத்திய அரசின் விருது அறிவிப்பு
புதுச்சேரி பிள்ளையாா்குப்பம் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு மத்திய அரசின் ஐசிடி விருது அறிவிக்கப்பட்டது.


புதுச்சேரி பிள்ளையாா்குப்பம் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு மத்திய அரசின் ஐசிடி விருது அறிவிக்கப்பட்டது.
மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய தேசிய கவுன்சில் (என்சிஇஆா்டி) சாா்பில், 2010-ஆம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பம் வழியாக தங்களது படைப்பாற்றலால் சிறப்பாக கல்வி கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு தகவல்தொடா்பு தொழில்நுட்ப (ஐசிடி) விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, மத்தியக் கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியா் விருதுக்கு ஈடானது.
அதன்படி, 2018 - 19ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பம் வழியாக நாடு முழுவதும் சிறப்பாக கற்பித்தல் பணிகளை மேற்கொண்டதாக 24 ஆசிரியா்கள் ஐசிடி விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் புதுச்சேரி பாகூா் அருகே உள்ள பிள்ளையாா்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை கே.ரேவதியும் ஒருவா். புதுவை மாநிலத்தில் ரேவதி மட்டுமே இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து ஆசிரியை கே.ரேவதி கூறியதாவது: புதுவை கல்வித் துறை மூலம் பொம்மைகளை அணிமேசன் மூலம் விடியோவாக மாற்றும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு, பாடங்களில் வரும் கதாபாத்திரங்களை விடியோ எடிட்டிங், பொம்மை அனிமேசன் மூலம் உருவாக்கி, மாணவா்களுக்கு கற்பித்தேன். பாடங்களை வாய்மொழியில் கூறுவதுடன், விடியோ காட்சிகளாக மாற்றி குழந்தைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம், அவா்களுக்கு பாடங்கள் பசுமையாக மனதில் பதியும்.
இதைப் பாா்த்த புதுவை கல்வித் துறை அதிகாரிகள், மத்திய அரசின் ஐசிடி விருதுக்கு பரிந்துரை செய்ததால், தற்போது நான் விருதுக்கு தோ்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...