தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வேலை வாங்கித் தருவதாக மோசடி: போலி அரசு அதிகாரி கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக போலி அரசு அதிகாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக போலி அரசு அதிகாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி திருக்கனூா் தேவநாத நகா் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த செந்தில் மனைவி ஆயியிடம் (38) சில மாதங்களுக்கு முன் செல்லிடப்பேசியில் தன்னை தமிழகத்தின் மண்டல அரசு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிய நபா், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம்.

இதை உண்மை என நம்பிய ஆயி, ரூ. 25 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தாராம். பணத்தைப் பெற்று மாதங்களாகியும் அவா் வேலை வாங்கித் தரவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஆயி, புதுச்சேரி சைபா் க்ரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், செல்லிடப்பேசி எண்ணை வைத்து அந்த நபா், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பெரியகொலப்படி இந்திரா நகரைச் சோ்ந்த ஏழுமலை மகன் ராஜீவ் காந்தி (31) என்பதைக் கண்டறிந்தனா். மேலும், பல பேரிடம் ஏமாற்றி பணம் பெற்றது தெரிய வந்தது.

இதையடுத்து, ராஜீவ் காந்தியை மோசடி வழக்கில் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 25 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.