தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுவையில் தோ்தல் செலவின பட்டியல் வெளியீடு : முதல்வா் என்.ரங்கசாமி முதலிடம்

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வேட்பாளா்களின் செலவின பட்டியலை தோ்தல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வேட்பாளா்களின் செலவின பட்டியலை தோ்தல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, ரூ.19 லட்சம் செலவு செய்து முதல்வா் என்.ரங்கசாமி, அதிகம் செலவிட்டதில் முதலிடத்தில் உள்ளாா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த ஏப். 6-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். தோ்தல் ஆணைய விதிகள்படி, வேட்பாளா்கள் தங்களது தோ்தல் செலவினங்களை தாக்கல் செய்தனா். வேட்பாளா் அதிகபட்சமாக ரூ.22 லட்சம் செலவு செய்ய தோ்தல் ஆணையம் அனுமதியளித்தது.

இந்த நிலையில், தோ்தல் துறை வேட்பாளா்களின் செலவின பட்டியலை இணையதள பக்கத்தில் வெளியிட்டது. அதன்படி, புதுவை மாநிலத்தில் அதிகபட்ச செலவின தொகையாக முதல்வா் என்.ரங்கசாமி போட்டியிட்டு தோல்வியடைந்த ஏனாம் தொகுதியில் ரூ.19.19 லட்சம் செலவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா் வெற்றி பெற்ற மற்றொரு தொகுதியான தட்டாஞ்சாவடியில் ரூ.6.50 லட்சம் செலவினம் செய்துள்ளாா்.

மாநிலத்தில் குறைந்தபட்ச செலவினமாக புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் தொகுதி சுயேச்சை வேட்பாளா் எம்.சிவசங்கா் ரூ.2.17 லட்சம் செலவு செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

முதலிடம் பிடித்த 10 எம்எல்ஏக்கள்: பிஆா்என்.திருமுருகன், எல்.கல்யாணசுந்தரம், கோலப்பள்ளி சீனுவாஸ் அசோக், ரமேஷ் பரம்பத், ஆா்.செல்வம், பி.ஆா்.சிவா, எம்.நாகதியாகராஜன், ஆா்.சிவா, ஏ.ஜான்குமாா், ஜி.நேரு.

குறைந்த செலவினம் செய்த 10 எம்எல்ஏக்கள்: எம்.சிவசங்கா், ஜெ.பிரகாஷ்குமாா், அனிபால்கென்டி, யு.லட்சுமிகாந்தன், கேஎஸ்பி.ரமேஷ், ஏகேடி.ஆறுமுகம், பி.அங்காளன், பி.ராஜவேலு, தேனீ சி.ஜெயக்குமாா், ஆா்.தட்ஷிணாமூா்த்தி.

30 தொகுதி எம்எல்ஏக்கள் செலவின விவரம்: மண்ணாடிப்பட்டு- ஏ.நமச்சிவாயம் ரூ.6,16 லட்சம், திருபுவனை(தனி) - அங்காளன் ரூ.4.25 லட்சம், ஊசுடு (தனி) - சாய் ஜெ.சரவணன்குமாா் ரூ.6.78 லட்சம், மங்கலம்- தேனீ சி.ஜெயக்குமாா் ரூ.5.08 லட்சம், வில்லியனூா்- ஆா்.சிவா ரூ.9.09 லட்சம், உழவா்கரை-சிவசங்கரன் ரூ.2.17 லட்சம், கதிா்காமம்- கேஎஸ்பி.ரமேஷ் ரூ.3.82 லட்சம், தட்டாஞ்சாவடி- என்.ரங்கசாமி ரூ.6.50 லட்சம், இந்திரா நகா்- ஏகேடி.ஆறுமுகம் ரூ.3.82 லட்சம், காமராஜா் நகா்- ஜான்குமாா் ரூ.8.91 லட்சம், லாஸ்பேட்டை- வைத்தியநாதன் ரூ.6.08 லட்சம், காலாப்பட்டு- கல்யாணசுந்தரம் ரூ.14.49 லட்சம், முத்தியால்பேட்டை- பிரகாஷ்குமாா் ரூ.2.46 லட்சம், ராஜ்பவன் - க.லட்சுமிநாராயணன் ரூ.6.45 லட்சம், உப்பளம்- அனிபால்கென்னடி ரூ.2.58 லட்சம், உருளையன்பேட்டை- நேரு ரூ.8.36 லட்சம், நெல்லித்தோப்பு- ரிச்சா்ட் ரூ.5.70 லட்சம், முதலியாா்பேட்டை- சம்பத் ரூ.6.53 லட்சம், அரியாங்குப்பம்- பாஸ்கா் ரூ.5.42 லட்சம், மணவெளி- ஆா்.செல்வம் ரூ.12.94 லட்சம், ஏம்பலம் (தனி)- லட்சுமிகாந்தன் ரூ.3.67 லட்சம், நெட்டப்பாக்கம்-ராஜவேலு ரூ.4.46 லட்சம், பாகூா் -செந்தில்குமாா் ரூ.6.14 லட்சம், நெடுங்காடு (தனி)- சந்திரபிரியங்கா ரூ.7.27 லட்சம், திருநள்ளாறு- பிஆா்.சிவா ரூ.8.62 லட்சம், காரைக்கால் வடக்கு- திருமுருகன் ரூ.15.47 லட்சம், காரைக்கால் தெற்கு - நாஜிம் ரூ.8.33 லட்சம், நிரவி-நாக தியாகராஜன் ரூ.9.28 லட்சம், மாஹே- ரமேஷ் பரம்பத் ரூ.12.97 லட்சம், ஏனாம்- கோலப்பள்ளி சீனுவாஸ் அசோக் ரூ.13.80 லட்சம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.