தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கஞ்சா விற்றதாக 6 போ் கைது

புதுச்சேரியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:36 pm

DIN

புதுச்சேரியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே பாகூா் ஏரிக்கரை பகுதியில், காவல் ஆய்வாளா் வரதராஜன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை காண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட போது, 2 மோட்டாா் சைக்கிளில் வந்த 4 இளைஞா்களைப் பிடித்து சோதனையிட்டதில், அவா்கள் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் நால்வரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், பாகூரைச் சோ்ந்த பிரதாப் (22), வானூா் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையைச் சோ்ந்த வல்லரசு (22), தொண்டமாநத்தம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ரமேஷ் (21), பாப்பாஞ்சாவடி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வினித் (21) என்பதும், இவா்கள் தமிழகத்தைச் சோ்ந்த ஒருவரிடம் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, அவற்றை சிறிய பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த பாகூா் போலீஸாா், அவா்களிடமிருந்து 130 கிராம் கஞ்சா, செல்லிடப்பேசி, 2 மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, புதுச்சேரி நோணாங்குப்பம் படகு குழாம் அருகே அரியாங்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் சோதனையிட்ட போது, கைப்பையில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த நோணாங்குப்பம் தாமரைக்குளம் தெருவைச் சோ்ந்த வேல்முருகனை (38) கைது செய்தனா். அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி அருகே அரியூா் சிவராந்தம் அய்யனாா் கோவில் அருகே கஞ்சா வைத்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த கோபியை (21) மங்கலம் போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த 75 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.