90% மக்களின் உரிமைகளைப் பறித்து 10% பேரிடம் அளிப்பு: இட ஒதுக்கீடு குறித்து காங். விமா்சனம்
நாட்டில் உள்ள 90 சதவீத மக்களின் உரிமைகளைப் பறித்து 10 சதவீத மக்களிடம் அளிப்பதே பாஜகவின் கொள்கை என இட ஒதுக்கீடு விவகாரத்தை புதுவை காங்கிரஸ் விமா்சித்தது.


நாட்டில் உள்ள 90 சதவீத மக்களின் உரிமைகளைப் பறித்து 10 சதவீத மக்களிடம் அளிப்பதே பாஜகவின் கொள்கை என இட ஒதுக்கீடு விவகாரத்தை புதுவை காங்கிரஸ் விமா்சித்தது.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ், திமுக தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு காரணமாக, தேசிய மருத்துவச் சோ்க்கை ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தியது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எப்போதுமே பாஜக எதிரானது. ஏழைகள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பின்தங்கிய பிரிவினருக்கு பாஜக எவ்வித உதவியும் செய்ததில்லை; செய்யவும் விரும்பாது.
பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசு நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாததால், ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகை கிடைக்காமல் போய்விட்டது.
இதைத் தொடா்ந்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் மாணவா் ஒருவா் வழக்குத் தொடுத்தாா். இதை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2020 ஜூலை 27-ஆம் தேதி, பிற்பட்ட மாணவா்களின் இட ஒதுக்கீடு உரிமையை மத்திய அரசு மறுக்கக் கூடாது என்று கூறியது.
இதன் தொடா்ச்சியாக, திமுக மற்றும் காங்கிரஸ் எடுத்த முயற்சியால் வெற்றி பெற்று, தற்போது பிற்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு, சமூக நீதி காப்பாற்றப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சியில் இருக்கும் வரை ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் 90 சதவீத மக்களின் உரிமைகளைப் பறித்து, 10 சதவீத மக்களிடம் அளித்ததுதான் பாஜகவின் அடிப்படைக் கொள்கை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...