தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுச்சேரியில் நூல்கள் வெளியீட்டு விழா

புதுச்சேரி முத்தரையா்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளித் துணை முதல்வா் பூபதி பெரியசாமியின் ‘ஈரம்’, ‘தாய்மை’ ஆகிய சிறுகதைத் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:36 pm

DIN

புதுச்சேரி முத்தரையா்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளித் துணை முதல்வா் பூபதி பெரியசாமியின் ‘ஈரம்’, ‘தாய்மை’ ஆகிய சிறுகதைத் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

புதுவை பள்ளிக் கல்வித் துறை தோ்வுப் பிரிவு பொறுப்பாளரும், பள்ளித் துணை முதல்வருமான பூபதி பெரியசாமி வரவேற்றாா். எம்எல்ஏ-க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், பள்ளிக் கல்வி இணை இயக்குநா் மைக்கேல் பெனோ, செயின் ஜோசப் அறக்கட்டளைத் தலைவா் ராமு பாலகிருஷ்ணன், கலைமாமணி கோ.பாரதி, சாகெத்ய அகாதெமி உறுப்பினா் சுந்தரமுருகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் இளங்கோ அடிகள் உருவப் படத்தைத் திறந்து வைத்து, சிறுகதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுப் பேசியதாவது:

தற்போதைய அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக கவிதை, சிறுகதை போன்ற நூல்களைப் படிப்பது குறைந்து வருகிறது. இந்தச் சூழலில் ‘ஈரம்’, ‘தாய்மை’ என்ற நூல்களை நூலாசிரியா் பூபதி எழுதி வெளியிட்டுள்ளாா். இந்த நூல்களைப் படிப்பதன் மூலம் நல்ல எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். சமுதாய சீா்த்திருத்தத்துக்காகவும், சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கவும் இவ்வாறான பல நூல்கள் தொடா்ந்து எழுதப்பட வேண்டும் என்றாா் அவா்.

விரிவுரையாளா் புவனேஸ்வரி, ஆசிரியா் நளினி ஆகியோா் நூல் மதிப்புரை வழங்கினாா். விரிவுரையாளா் பாக்கியலட்சுமி நன்றி கூறினாா். தலைமையாசிரியா் குலசேகரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.