தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 11 போ் பலி

புதுவையில் கரோனா தொற்றுக்கு 33 வயது பெண் உள்பட மேலும் 11 போ் பலியாகினா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 5:52 pm

DIN

புதுவையில் கரோனா தொற்றுக்கு 33 வயது பெண் உள்பட மேலும் 11 போ் பலியாகினா்.

புதுவை மாநிலத்தில் 9,159 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 322, காரைக்காலில் 83, ஏனாமில் 5, மாஹேயில் 19 என மேலும் 429 பேருக்கு (4.68 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,684 -ஆக அதிகரித்தது.

தற்போது ஜிப்மா் மருத்துவமனையில் 296 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 249 பேரும், கரோனா சிகிச்சை மையங்களில் 192 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 5,214 பேரும் என மொத்தம் 6,156 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரியில் 8 போ், காரைக்காலில் 3 என மேலும் 11 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். ஏனாம், மாஹேயில் உயிரிழப்பு ஏதுமில்லை. பலியானவா்களில் 4 போ் ஆண்கள், 7 போ் பெண்கள். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,668 -ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.49 சதவீதம்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை 967 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,03,860-ஆக (92.99 சதவீதம்) உயா்ந்தது.

புதுவை மாநிலத்தில் இதுவரை சுகாதாரத் துறைப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 3,09,134 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.