தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுச்சேரியில் திமுக ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் கரோனோ காலத்தில் தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணக் கொள்ளையைக் கண்டித்து, திமுக சார்பில் அக்கட்சி எம்எல்ஏக்கள் முன்னிலையில் கல்வித்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடை

News image
புதுச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
Updated On :14 ஜூன் 2021, 5:58 am

DIN

புதுச்சேரியில் கரோனோ காலத்தில் தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணக் கொள்ளையைக் கண்டித்து, திமுக சார்பில் அக்கட்சி எம்எல்ஏக்கள் முன்னிலையில் கல்வித்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் கரோனோ காலத்திலும் இணைய வழி வகுப்பு மூலம் அனைத்து தனியார் பள்ளிகளும் வகுப்புகள் நடத்தி வருகிறது. மேலும் முழுமையான கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் படவில்லை என்றும் கூறப்படுகிறது.

கரோனா பேரிடர் காலத்திலும், அனைத்து பெற்றோர்களையும் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் என வலியுறுத்தும், தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையைக் கண்டித்து, புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா தலைமையில், எம்எல்ஏக்கள் சம்பத், கென்னடி உள்ளிட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் பள்ளி கட்டண கொள்ளையைக் கண்டித்தும், இது தொடர்பாகநீதிமன்றம் வலியுறுத்திய கல்வி கட்டண முறையை அரசு அமல்படுத்த வலியுறுத்தியும், முழு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுவை அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். அரசுக்கு எதிராகவும், கல்வித்துறைக்கு எதிராகவும், கண்டன கோஷங்களை எழுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.