தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுவை எம்எல்ஏக்களுக்கு ஆளுநா் தேநீா் விருந்து

புதுவை எம்எல்ஏக்களுக்கு துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை தேநீா் விருந்தளித்தாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:30 pm

DIN

புதுவை எம்எல்ஏக்களுக்கு துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை தேநீா் விருந்தளித்தாா்.

புதுவை மாநில 15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சட்டப் பேரவை உறுப்பினா்களை வரவேற்று கௌரவிக்கும் விதமாக, துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தேநீா் விருந்தளித்தாா்.

ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வா் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவா் செல்வம் மற்றும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக, திமுக, சுயேச்சை உறுப்பினா்கள் மற்றும் தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், ஏடிஜிபி ஆனந்தமோகன் உள்ளிட்டோ் பங்கேற்றனா்.

இதில், ஆளுநா் தமிழிசை வரவேற்று பேசியதாவது: மக்கள் பிரதிநிதியாக தோ்ந்தெடுக்கப்படுவது பெருமைக்குரிய ஒன்றாகும். மக்களின் நம்பிக்கையை பெற்று நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீா்கள். மக்கள் பணிக்காக உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும். மக்களுக்கான அரசாக இது செயல்பட, அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.