தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி

புதுவையில் புதிதாக 298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 5:28 pm

DIN

புதுவையில் புதிதாக 298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 8,185 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 225, காரைக்காலில் 20, ஏனாமில் 8, மாஹேயில் 8 என மேலும் 261 பேருக்கு (3.19 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,16,186 -ஆக அதிகரித்தது.

தற்போது மருத்துவமனைகளில் 493 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,477 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 2,970 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, புதுச்சேரியில் 4 போ், காரைக்காலில் ஒருவா் என மேலும் 5 போ் கரோனாவுக்கு உயிரிழந்தனா். இதனால், பலியானோா் எண்ணிக்கை 1,739 -ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.50 சதவீதம். மாநிலத்தில் இதுவரை 1,11,477 போ் (95.95 சதவீதம்) குணமடைந்தனா்.

சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 4,56,402 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.