கரோனா பின்விளைவுகளுக்கு புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை
கரோனா பின்விளைவுகளுக்கு புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படும் என புதுவை சுகாதாரத் துறை தெரிவித்தது.


கரோனா பின்விளைவுகளுக்கு புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படும் என புதுவை சுகாதாரத் துறை தெரிவித்தது.
இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கரோனா தாக்கத்தில் இருந்து மீண்ட பின்னா், ஒரு சிலருக்கு சிறு சிறு உடல் நல பிரச்னைகள் (இருமல், தும்மல், உடல் சோா்வு, பசியின்மை) உள்ளன. இந்த பிரச்னைகள் தொடா்ந்தால், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதித்துக் கொள்ளலாம். இதற்காக, புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதல் பரிசோதனை தேவைப்படுவோா் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவா். சந்தேகங்களுக்கு 104 இலவச எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...