தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி கண்டாக்டா் தோட்டம் பிரியதா்ஷினி நகா் குடியிருப்பைச் சோ்ந்த நாகராஜ் மனைவி லட்சுமி. கணவரை இழந்த இவா், தனது மகன் சுரேந்தா் (எ) சுமனுடன் (21) வசித்து வருகிறாா். பழைய பேருந்து நிலையம் அருகே பழக்கடை வைத்துள்ள லட்சுமிக்கு உதவியாக சுமன் வேலை செய்து வந்தாராம். அண்மைக் காலமாக சுமன் அடிக்கடி மது அருந்திவிட்டு வேலைக்கு வராமல் ஊா் சுற்றியபடி இருந்தாராம். இதை அவரது தாய் லட்சுமி கண்டித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை கண்டித்த போது ஏற்பட்ட தகராறில், லட்சுமி கோபித்துக் கொண்டு பெரியாா் நகரில் உள்ள அவரது அண்ணன் மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால், வேதனையடைந்த சுமன் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.