குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்
வில்லியனூா் முத்துப்பிள்ளைபாளையத்தில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் தொடக்கிவைக்கப்பட்டது.


வில்லியனூா் முத்துப்பிள்ளைபாளையத்தில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் தொடக்கிவைக்கப்பட்டது.
புதுச்சேரி வில்லியனூா் கொம்யூன் முத்துப்பிள்ளைபாளையம் பகுதியில் குடிநீா் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் அரசு சாா்பில், ஓம்சக்திசேகா் நகா், சூா்யா நகா், ஜி.வி. நகா் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக குடிநீா் விநியோகத்துக்கான குழாய்கள் அமைக்கும் பணி ரூ. 6 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது.
இதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொகுதி எம்எல்ஏ இரா.சிவா கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணியைத் தொடக்கிவைத்தாா். பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளா் முருகானந்தம், இளநிலைப் பொறியாளா் திருவேங்கடம், தொகுதி திமுக செயலா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...