தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுவையில் கரோனா மூன்றாம் அலைதடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த ஆலோசனை

புதுவையில் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்வதுடன், டெல்டா பிளஸ் தொற்று பாதிப்பைத் தவிா்க்கும் வகையில், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்

News image
Updated On :25 ஜூன் 2021, 5:28 pm

DIN

புதுவையில் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்வதுடன், டெல்டா பிளஸ் தொற்று பாதிப்பைத் தவிா்க்கும் வகையில், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் ஆலோசனை வழங்கினாா்.

புதுச்சேரியில் வாராந்திர கரோனா தடுப்பு மேலாண்மைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைநிலை ஆளுநா்(பொ) தமிழிசை தெலங்கானாவிலிருந்து காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றாா். தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், காவல் துறை இயக்குனா் ரன்வீா்சிங் கிருஷ்ணியா, வருவாய் துறைச் செயலா் அசோக்குமாா், செய்தித் துறைச் செயலா் உதயகுமாா், சுகாதாரத் துறைச் செயலா் அருண், துணைநிலை ஆளுநரின் செயலா் அபிஜித்விஜய் சௌத்ரி, கரோனா மேலாண்மை அதிகாரி ரமேஷ், உலக சுகாதார நிறுவன பிரதிநிதி சாயிராபானு, ஜிப்மா் மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள்

கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கரோனா மூன்றாம் ஆலையை எதிா்கொள்ள தடுப்பூசி செலுத்துவது, கிராம அளவில் கரோனா தொற்றின் தீவிரத்தைக் குறைப்பது தொடா்பாக அதிகாரிகள் தங்களது கருத்துகளை வழங்கினா்.

தொடா்ந்து, ஆளுநா் தமிழிசை பேசியதாவது: புதுவையில் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்வதுடன், டெல்டா பிளஸ் தொற்று பாதிப்பைத் தவிா்க்கும் வகையில், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மக்களிடையே தீவிர விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால், சிகிச்சையளிப்பதற்கான நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவனம் புதுவை அரசுக்கு 15 ஆயிரம் முகக் கவசங்களை வழங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.