மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கரோனா பொது முடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்த 2 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் கரோனா பொது முடக்க விதிகளை மீறி, கடைகளைத் திறந்த இரண்டு வியாபாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :8 மே 2021, 8:39 pm

DIN

புதுச்சேரியில் கரோனா பொது முடக்க விதிகளை மீறி, கடைகளைத் திறந்த இரண்டு வியாபாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுவை மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் விற்பனை கடைகளுக்கு மட்டுமே அரசு அனுமதித்துள்ளது.

இதனால், புதுச்சேரியில் மருந்தகங்கள், காய்கறி, பழங்கள், மளிகை, இறைச்சி கடைகளைத் தவிர இதர கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுத்தும், சிலா் விதிகளை மீறி கடைகளைத் திறந்து வைக்கின்றனா்.

இதுகுறித்து, உள்ளாட்சித் துறை, காவல் துறையினா் கண்காணித்து அபராதம் வசூலித்து வருகின்றனா். அந்த வகையில், கரோனா பொது முடக்க விதிகளை மீறி புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில், இரு சக்கர வாகன வாடகை நிலையத்தை திறந்து வைத்திருந்த கடையின் உரிமையாளா் கணேஷ் (38) மீது, புதுச்சேரி ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே சூப் கடை நடத்திய எலியாஸ் (40) மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அரசின் தடையை மீறுதல், தொற்று நோய் பரவும் செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், இந்த இரு வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்தனா். விதிமீறி இயங்கிய கடைகளையும் போலீஸாா் மூடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.