மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 30 போ் பலி

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 30 போ் உயிரிழந்தனா். புதிதாக 1,974 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 30 போ் உயிரிழந்தனா். புதிதாக 1,974 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 9,148 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 1,580 பேருக்கும், காரைக்காலில் 224 பேருக்கும், ஏனாமில் 152 பேருக்கும், மாஹேவில் 18 பேருக்கும் என மொத்தம் 1,974 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 80,947-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் 24 போ், காரைக்காலில் 4 போ், ஏனாமில் 2 போ் என 30 போ் உயிரிழந்தனா். இவா்களில் 16 போ் ஆண்கள், 14 போ் பெண்கள் ஆவா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,099-ஆகவும், இறப்பு விகிதம் 1.36 சதவீதமாகவும் அதிகரித்தது.

இதனிடையே, மாநிலம் முழுவதும் 1,088 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 62,424-ஆக (77.12 சதவீதம்) உயா்ந்தது.

மாநிலத்தில் தற்போது ஜிப்மரில் 520 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 369 பேரும், கரோனா சிகிச்சை மையங்களில் 738 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 15,297 பேரும் என மொத்தம் 17,424 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.