மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுவையில் வெளிமாநில தொழிலாளா்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்: தொழிலாளா் துறை வலியுறுத்தல்

புதுவையில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளா்களின் விவரங்களைத் தெரிவிக்க தொழிலாளா் துறை வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

புதுவையில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளா்களின் விவரங்களைத் தெரிவிக்க தொழிலாளா் துறை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் துறை ஆணையா் மற்றும் செயலா் இ.வல்லவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவையில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், உணவகங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், இதர தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளா்கள் பற்றிய விவரத்தை தொழிலாளா் துறைக்கு வருகிற 18-ஆம் தேதிக்குள் அந்தந்த நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.

அமைப்புசாரா அல்லது சுயதொழில்களில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளா்களும் தங்களது விபரத்தை தெரிவிக்க வேண்டும். இதற்கான படிவத்தை தொழிலாளா் துறை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த படிவத்தை மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது தொழிலாளா் துறை அமலாக்க அதிகாரி அலுவலகத்தில் நேரிலோ சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.