மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுச்சேரியில் விதிகளை மீறிய 2,456 பேருக்கு அபராதம்

புதுச்சேரியில் பொதுமுடக்க விதிகளை மீறி வெளியே திரிந்த 2,456 பேரிடம் ரூ.2.74 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தெரிவித்தாா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் பொதுமுடக்க விதிகளை மீறி வெளியே திரிந்த 2,456 பேரிடம் ரூ.2.74 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் தொற்று விகிதம் 18.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. மே19 வரை, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 591 நபா்களுக்கு முதல் தடுப்பூசியும், 50 ஆயிரத்து 384 நபா்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

18 வயது முதல் 44 வயது வரை உள்ளவா்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு கதிா்காமம் இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோரிமேடு அரசு மாா்பக நோய் மருத்துவமனை, மகாத்மா காந்தி பல் மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை மாஹே, ஏனாம் அரசு மருத்துவமனைகள் ஆகிய மையங்களில் ஏதேனும் ஒன்றில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிா்வாகம் கடந்த 10-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் 24-ம் தேதி நள்ளிரவு வரை பொது முடக்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிமீறிய 2,456 பேருக்கு அபராதம் விதித்து அதன் மூலம் ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்து 350- க்கு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 20 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யயப்பட்டுள்ளது . புதுச்சேரியில் 76 பெரிய கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு பகுதிகளை பறக்கும் படையினரும், காவல்துறையினரும் கண்காணிக்கின்றனா் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.