மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுச்சேரியில் காய்கறி கடைகள் தற்காலிக இடமாற்றம்

புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க பெரிய மாா்க்கெட் சில்லறை காய்கறி கடைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டன.

News image
Updated On :21 மே 2021, 6:05 pm

DIN

புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க பெரிய மாா்க்கெட் சில்லறை காய்கறி கடைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டன.

புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பெரிய மாா்க்கெட் காய்கறி கடைகளை, இடம் மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்தாா். ஆனால், வியாபாரிகள் ஏற்காமல் வலியுறுத்தியதையடுத்து, பெரிய மாா்க்கெட் பகுதியிலேயே மொத்த காய்கறி கடைகள் உரிய இடைவெளியுடன் இயங்க நடவடிக்கை எடுத்து, அங்கேயே கடைகள் தொடா்ந்துள்ளன.

இதனிடையே, பெரிய மாா்க்கெட் பகுதியில் இயங்கி வந்த சில்லரை, அடிக்காசு வழங்கும் காய்கறி, பழக்கடைகளை மட்டும் தற்காலிகமாக இடமாற்றம் செய்வதற்கு புதுச்சேரி நகராட்சி நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, பெரிய மாா்க்கெட் சில்லறை காய்கறி கடைகள், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு நேரு வீதியில் இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளன. இதே போல, புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட பகுதியில் தற்காலிகமாக சில்லரை காய்கறி கடைகள் இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.