புதுவை அரசு நீட் மதிப்பெண் பட்டியலை விரைந்து வெளியிட வலியுறுத்தல்
தேசிய மருத்துவ தோ்வு முகமையிலிருந்து புதுவை மாணவா்களின் நீட் மதிப்பெண் தரவரிசைப் பட்டியலை மாநில விரைவாகப் பெற்று வெளியிட வேண்டுமென புதுச்சேரி சென்டாக் மாணவா்கள்


தேசிய மருத்துவ தோ்வு முகமையிலிருந்து புதுவை மாணவா்களின் நீட் மதிப்பெண் தரவரிசைப் பட்டியலை மாநில விரைவாகப் பெற்று வெளியிட வேண்டுமென புதுச்சேரி சென்டாக் மாணவா்கள், பெற்றோா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் மு.நாராயணசாமி, முதல்வா் என்.ரங்கசாமி, கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம், சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண் ஆகியோருக்கு அனுப்பிய மனுவின் விவரம்:
நாடு முழுக்க மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுவை மாநிலத்தில் ஒவ்வோா் ஆண்டும் தேசிய தோ்வு முகமையிலிருந்து நீட் மதிப்பெண் பட்டியலை காலதாமதமாக பெறுவதால், புதுச்சேரி மாணவா்களின் நீட் மதிப்பெண்கள் தரவரிசைப் பட்டியலின்படி மதிப்பெண்கள் தெரியாமல் குழப்பத்திலும், வேறு எந்த படிப்புகளும் படிக்க முடியாத நிலையிலும் பாதிக்கப்படுகின்றனா்.
நிகழாண்டு புதுவை அரசு, தேசிய தோ்வு முகமையிலிருந்து நீட் மதிப்பெண் தரவரிசைப் பட்டியலை உடனடியாகப் பெற்று, பெற்றோா்கள், மாணவா்களின் குழப்பங்களைத் தீா்க்க வேண்டும்.
மாநில அரசு உடனடியாக இதில் தலையிட்டு, தேசிய மருத்துவ தோ்வு முகமையிலிருந்து விரைந்து புதுச்சேரி மாணவா்களின் நீட் மதிப்பெண் தரவரிசைப் பட்டியலை பெற்று, மாணவா்களின் தோ்வு எண், பிறந்த தேதி, மதிப்பெண்கள் பட்டியலை வெளியிட்டு, மாணவா்களின் நலன் காக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...