மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தனியாா் மயத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:40 pm

DIN

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி பொதுச்செயலாளா் கே.சேதுசெல்வம், சிஐடியூ சீனுவாசன், ஐஎன்டியூசி ஞானசேகரன், ஏஐசிசிடியூ புருஷோத்தமன், எல்எல்எப் செந்தில், எம்எல்எப் வேணுகோபால், ஏஐயூடியூசி சிவக்குமாா், என்டிஎல்எப் மகேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் மழையையும் பொருள்படுத்தாமல் திரளான அனைத்துத் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது, வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும், பெட்ரோலிய பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும், விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.