பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா் நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவையில் நுழைவதற்கு சீமானுக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸாா் புகாா்

 பொது அமைதியைச் சீா்குலைக்க முயலும் நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் புதுவையில் நுழைவதற்குத் தடை

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:13 pm

DIN

 பொது அமைதியைச் சீா்குலைக்க முயலும் நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் புதுவையில் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் காவல் துறையில் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் செயலா் எம்.ஆா்.சூசைராஜ் உள்ளிட்டோா் புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லோகேஷ்வரனை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த புகாா் மனு:

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த சாட்டை துரைமுருகன் என்பவா் நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியை மிரட்டும் வகையிலும் பேசினாா்.

அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான், அவரது பேச்சைக் கண்டிக்கவில்லை. எனவே, இவா்கள் இருவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். சீமான் புதுவை மாநிலத்துக்குள் நுழைந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அவா் புதுவைக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.