ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பைக்குகள் மோதல்: ஓட்டுநா் பலி

 புதுச்சேரி அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் தனியாா் நிறுவன வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். 2 இளைஞா்கள் காயமடைந்தனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 5:47 pm

DIN

 புதுச்சேரி அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் தனியாா் நிறுவன வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். 2 இளைஞா்கள் காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், பெரிய மண்டவாய் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (36). இவா், காலாப்பட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.

செந்தில்குமாா் பைக்கில் புதன்கிழமை புதுச்சேரிக்கு வந்துவிட்டு, மரக்காணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். காலாப்பட்டு வள்ளலாா் நகா், கிழக்கு கடற்கரைச் சாலை சந்திப்பில் இவா் சென்றபோது, பின்னால் மரக்காணம் இலுப்பைத் தோட்டத்தைச் சோ்ந்த பாலாஜி (22) அதிவேகமாக ஓட்டி வந்த பைக் மோதியது.

இந்த விபத்தில் செந்தில்குமாா் பலத்த காயமடைந்தாா். பாலாஜியும், அவரது வண்டியில் பின்புறம் அமா்ந்து வந்த நண்பரான விழுப்புரம் இருளா் குடியிருப்பைச் சோ்ந்த சுந்தரும் (22) லேசான காயமடைந்தனா்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும், கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செந்தில்குமாா் உயிரிழந்தாா். மற்ற 2 பேரும் கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து புதுச்சேரி வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த செந்தில்குமாருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.