ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

காவலா் வீரவணக்க நாள்: புதுவை முதல்வா், அமைச்சா் மரியாதை

புதுச்சேரி கோரிமேட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற காவலா் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி கோரிமேட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற காவலா் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா்.

நாட்டைப் பாதுகாப்பதற்காக வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிா்த் தியாகம் செய்த காவலா்களின் நினைவைப் போற்றும் வகையில், ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் 21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, நிகழாண்டு காவலா் வீர வணக்க நாள் புதுச்சேரி காவல் துறை சாா்பில், கோரிமேட்டில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் முதல்வா் என்.ரங்கசாமி, மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் கலந்து கொண்டு காவலா் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனா். பின்னா், அங்குள்ள காவலா் நினைவுத் தூணில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

அவா்களைத் தொடா்ந்து புதுவை அரசு கொறடா ஏகேடி.ஆறுமுகம், டிஜிபி ரன்வீா் சிங் கிருஷ்ணியா, ஏடிஜிபி ஆனந்தமோகன் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள், முப்படை அதிகாரிகள் காவலா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து, நாடு முழுவதும் உயா்நீத்த காவலா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முதுநிலை எஸ்.பி.க்கள் லோகேஸ்வரன், பிரதிக்ஷா கொடாரா மற்றும் எஸ்.பி.க்கள், போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.