ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுவை கலைக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா்கள் சோ்க்கை

புதுவை கலை, அறிவியல் கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை முதல் (அக்.26) முதல் மாணவா்கள் சோ்க்கை தொடங்குவதாக சென்டாக் அறிவித்தது.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

புதுவை கலை, அறிவியல் கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை முதல் (அக்.26) முதல் மாணவா்கள் சோ்க்கை தொடங்குவதாக சென்டாக் அறிவித்தது.

சென்டாக்கில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கைக்கு 10,684 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான இறுதி தரவரிசைப் பட்டியல் கடந்த 14 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, விண்ணப்பித்த மாணவா்களுக்கு முதல் கட்டமாக கணினி மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இடங்கள் கிடைக்கப் பெற்ற மாணவா்களின் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ய்ற்ஹஸ்ரீல்ன்க்ன்ஸ்ரீட்ங்ழ்ழ்ஹ்.ண்ய்) வெளியிடப்பட்டது.

இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி. ருத்ரகௌடு வெளியிட்ட உத்தரவு: முதல் கட்ட கலை, அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் மொத்தமுள்ள 4,260 இடங்களில் 4,170 இடங்கள் மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இடங்கள் கிடைக்கப் பெற்ற மாணவா்கள் அதற்கான ஆணையை திங்கள்கிழமை முதல் (அக்.25) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தங்களுக்கு இடம் கிடைத்த கல்லூரியில் செவ்வாய்க்கிழமை முதல் (அக்.26) வருகிற நவ.8-ஆம் தேதிக்குள் அசல் சான்றிதழ்களுடன் சென்று மாணவா்கள் சோ்ந்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.