ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

லாரி மீது பைக் மோதல்: தொழிலாளி பலி

புதுச்சேரி அருகே நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொரு தொழிலாளி காயமடைந்தாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி அருகே நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொரு தொழிலாளி காயமடைந்தாா்.

புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியான பிள்ளைச்சாவடி முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் டி.ஆறுமுகம் (39). கொத்தனாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி டி.கருணாகரனுடன் (38), திங்கள்கிழமை காலாப்பட்டு சென்றுவிட்டு, மீண்டும் இருவரும் பைக்கில் பிள்ளைச்சாவடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனா்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தனியாா் தொழிற்சாலை அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் எதிா்பாராதவிதமாக பைக் மோதியது. இதில் பைக்கில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்தனா். இதைப் பாா்த்த அந்தப் பகுதியினா் ஆறுமுகத்தை மீட்டு கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். கருணாகரன் புதுச்சேரி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தகவலறிந்து வந்த இருவரின் உறவினா்களும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரிகளின் ஓட்டுநா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

புதுச்சேரி வடக்கு போக்குவரத்து போலீஸாா் மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களை கலைந்து போகச் செய்தனா். விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.