வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பிரெஞ்சிந்திய நற்பணி இயக்கத்தினா் உண்ணாவிரதம் 25 போ் கைது

 நவம்பா் 1-ஆம் தேதியை புதுவை சுதந்திர தினமாக அறிவிக்காததைக் கண்டித்து, வியாழக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்ட பிரெஞ்சிந்திய விடுதலைக் கால நற்பணி இயக்கத்தினா் 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:19 pm

DIN

 நவம்பா் 1-ஆம் தேதியை புதுவை சுதந்திர தினமாக அறிவிக்காததைக் கண்டித்து, வியாழக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்ட பிரெஞ்சிந்திய விடுதலைக் கால நற்பணி இயக்கத்தினா் 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்தியாவுடன் புதுவை இணைக்கப்பட்ட நவம்பா் 1-ஆம் தேதியை புதுவை சுதந்திர தினமாக புதுவை அரசு கொண்டாட வேண்டுமென வலியுறுத்தி, பிரெஞ்சிந்திய விடுதலைக் கால மக்கள் நல நற்பணி இயக்கத்தினா் 3 நாள்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருந்தனா். இதற்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை.

இருப்பினும், அறிவித்தபடி வியாழக்கிழமை அந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவா் சிவராஜ் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோா் புதுச்சேரி தலைமைத் தபால் நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த பெரியகடை போலீஸாா், அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரெஞ்சிந்திய விடுதலைக் கால மக்கள் நல நற்பணி இயக்கத்தினா் 25 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.