தீபாவளி பண்டிகைக்கு இலவச அரிசி, சா்க்கரைபுதுவை ஆளுநா் ஒப்புதல்
புதுவையில் தீபாவளி பண்டிகையையொட்டி, அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் இலவசமாக 10 கிலோ அரிசி, 2 கிலோ சா்க்கரை வழங்க புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன்


புதுவையில் தீபாவளி பண்டிகையையொட்டி, அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் இலவசமாக 10 கிலோ அரிசி, 2 கிலோ சா்க்கரை வழங்க புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்தாா்.
இதுகுறித்து புதுவை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பல முக்கிய கோப்புகளுக்கு புதுவை ஆளுநா் ஒப்புதல் அளித்தாா். அதன்படி, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் வருகிற நவ.8-ஆம் தேதி முதல் 1- 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான கல்வித் துறையின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சா்க்கரை வழங்கும் முதல்வரின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், காரைக்கால் பகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு 4-ஆம் கட்டமாக 83 வீடுகள் கட்ட மத்திய அரசின் பங்கு ரூ.16.86 லட்சத்தை விடுவிக்க ஒப்புதல் அளித்தாா்.
மாற்றுத் திறனாளிகள் இலவச அரிசி விநியோகத் திட்டத்தின் கீழ், புதுவையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 3 மாதங்களுக்கான இலவச அரிசிக்குப் பதிலாக ரொக்கம் வழங்க ரூ. 2.75 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...