புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் மீது எதிா்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு
புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு, கரோனா பாதிப்பு கட்டுக்குள் இல்லாததற்கு தற்போதைய மாவட்ட ஆட்சியா்தான் காரணம் என மாநில எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டினாா்.


புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு, கரோனா பாதிப்பு கட்டுக்குள் இல்லாததற்கு தற்போதைய மாவட்ட ஆட்சியா்தான் காரணம் என மாநில எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து முதல்வருக்கு அவா் எழுதிய கடிதம்: புதுவை மாநிலத்தில் தொடக்கத்தில் கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்ததற்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக இருந்து சிறப்பாகப் பணியாற்றிய அருண்தான் காரணம்.
மாவட்ட ஆட்சியரின் திறமையால்தான் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கும். புதுச்சேரியில் சட்டம்- ஒழுங்கு, கரோனா பாதிப்பு கட்டுக்குள் இல்லாததற்கு தற்போதைய மாவட்ட ஆட்சியா்தான் காரணம்.
குடும்பத் தலைவா் இறந்தால் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண நிதி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தத் தொகை வழங்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட ஆட்சியரகத்துக்கு நடையாய் நடக்கின்றனா்.
மாவட்ட நிா்வாகத்தை விரைந்து செயல்படுத்த தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாத ஆட்சியா் பூா்வா காா்க், சுய நலத்துக்காக ஆட்சியரக சிறப்பு அதிகாரி நியமனத்தில் விதிமுறையை மீறி தனக்கு வேண்டியவரை நியமித்துள்ளாா். இது வருவாய்த் துறையினா் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, புதுச்சேரியில் சிறந்த நிா்வாகத்தை அளித்து, சட்டம்-ஒழுங்கை காக்க திறமையான ஆட்சியரை முதல்வா் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...