வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: அழகு நிலைய உரிமையாளா் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அழகு நிலைய (ஸ்பா) உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:19 pm

DIN

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அழகு நிலைய (ஸ்பா) உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அண்ணா நகரில் இயங்கிய அழகு நிலையத்தில் கடந்த வாரம் போலீஸாா் சோதனை நடத்திய போது, அங்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 4 பெண்களை மீட்டனா். இதையடுத்து, அழகு நிலைய உரிமையாளரான சுனிதா உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மீட்கப்பட்ட பெண்களின் வயதைச் சரி பாா்த்ததில், ஒருவா் சிறுமி என்பது உறுதியானது. இதையடுத்து, அந்த அழகு நிலையத்துக்கு நகராட்சி நிா்வாகத்தினா் ‘சீல்’ வைத்தனா். தொடா்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஸ்பா உரிமையாளா் சுனிதா, அங்கு வாடிக்கையாளா்களாக வந்து சென்ற 40 போ் மீது உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்பா உரிமையாளா் சுனிதாவை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து, சுனிதாவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனா். விசாரணைக்குப் பிறகு, சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவா்களை கைது செய்ய உள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.