ஓய்வூதியா்கள் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்
புதுச்சேரி நகராட்சி அலுவலக வளாகத்தில் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, நகராட்சி ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


புதுச்சேரி நகராட்சி அலுவலக வளாகத்தில் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, நகராட்சி ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு சங்கக் கூட்டமைப்பின் செயலா் உதயகுமாா் தலைமை வகித்தாா். தலைவா்கள் குமரேசன், அசோகன், ஆனந்தராஜ், கோபு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஓய்வு பெற்ற ஊழியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது: புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்கள் 750 போ் வரை உள்ளனா். இவா்களில் 250 பேருக்கு இதுவரை ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் பலருக்கு ஓய்வூதியப் பலன்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. இந்த நிலையில், மாதந்திர ஓய்வூதியமும் கடந்த ஓராண்டாக வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. நகராட்சி பணியாளா்களுக்கும் கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்காமல் உள்ளனா்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, 4 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், ஓய்வூதியப் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா் அவா்கள்.
இதையடுத்து, ஓய்வூதியா்கள் சங்க நிா்வாகிகள் நகராட்சி ஆணையா் சிவக்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையா் உறுதியளித்தாா். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியா்கள் சங்கத்தினா் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...