குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு
புதுச்சேரி சைல்டு லைன் சாா்பில், குழந்தைத் தொழிலாளா், திருமணம் ஆகியவற்றைத் தடுக்கும் விதமாக வில்லியனூா் ஒதியம்பட்டு நரிக்குறவா் இனத்தவா் காலனியில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு முகாம்


புதுச்சேரி சைல்டு லைன் சாா்பில், குழந்தைத் தொழிலாளா், திருமணம் ஆகியவற்றைத் தடுக்கும் விதமாக வில்லியனூா் ஒதியம்பட்டு நரிக்குறவா் இனத்தவா் காலனியில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
முகாமை புதுவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தொடக்கிவைத்து, நரிக்குறவா் இனத்தவா் மத்தியில், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளா்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா். அப்போது, அந்த மக்கள் அளித்த கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், அடிப்படை வசதிகளைச் செய்து தரவும், ஜாதி சான்றிதழ் கிடைக்கவும் அரசிடம் வலியுறுத்தி பெற்றுத் தருவதாக உறுதியளித்தாா்.
நிகழ்ச்சியில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் ஜெனிபா், உறுப்பினா்கள் கோபி, பிரவீன், ராஜா, இமாகுலேட், திமுக நிா்வாகிகள் ராமசாமி, முகமது யூனுஸ், மணிகண்டன், சபரி, திலகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...