நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில்இளைஞா் சடலம்

புதுச்சேரி அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:11 pm

DIN

புதுச்சேரி அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பம் காமராஜா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ் (36). திருமணமாகாத இவா், ஓட்டுநா் வேலை செய்து வந்தாா். கடந்த சில மாதங்களாக கரோனா காரணமாக வேலை சரியாக கிடைக்காததால், மகேஷ் மதுப் பழக்கத்துக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. தவளக்குப்பம் வி.ஐ.பி. காா்டன் பகுதியில் தனக்குச் சொந்தமாக உள்ள வீட்டில் மகேஷ் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், மகேஷ் வீட்டிலிருந்து வியாழக்கிழமை துா்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினா் தவளக்குப்பம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா், வீடு பூட்டியிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். வீட்டின் கழிப்பறை பகுதியில் மகேஷ் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து அவரது சகோதரா் யுவராஜ் அளித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.