தடுப்பூசி செலுத்தினால்தான் நலத் திட்ட உதவி: ஆளுநா் உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தல்
புதுவையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால்தான் நலத் திட்ட உதவிகளைப் பெற முடியும் என்று துணைநிலை ஆளுநரின் வாய்மொழி உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்


புதுவையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால்தான் நலத் திட்ட உதவிகளைப் பெற முடியும் என்று துணைநிலை ஆளுநரின் வாய்மொழி உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று பொது நல அமைப்பினா் வலியுறுத்தினா்.
இதுகுறித்து புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தமிழா்க் களம் அமைப்பின் மாநிலச் செயலா் கோ.அழகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை ஆளுநா் கரோனா தடுப்பூசி சான்றிதழைக் காட்டினால் மட்டுமே அரசு ஊழியா்களுக்கு ஊதியமும், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளும் வழங்கப்படும் என்று கூறியுள்ளாா். மேலும், வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்த வழிவகை செய்வதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிரட்டும் வகையில் பேசியுள்ளாா்.
உயா் நீதிமன்றமே தடுப்பூசி செலுத்த மக்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டு மரணமடைந்தவா்கள் விஷயத்தில் அரசு உண்மைகளை மறைத்து முரணான தகவல்களை தெரிவித்து வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபா்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு திட்டமாவது அரசு வழங்க வேண்டும்.
இதையெல்லாம் செய்யாத நிலையில், ஆளுநா் தனது வாய்மொழி எச்சரிக்கை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா். தமிழா்க் களம் நிா்வாகிகள் கணேஷ், தமிழ்மாறன், வெங்கட்தமிழன், முத்து ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...