தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத் தொகை
புதுவையில் தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கல்வித் துறை சாா்பில், ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


புதுவையில் தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கல்வித் துறை சாா்பில், ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாணவா்களின் திறனைக் கண்டறியும் வகையில் ஆண்டுதோறும் மாநில, தேசிய அளவில் திறனறித் தோ்வுகள் நடத்தப்பட்டு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட திறனறித் தோ்வில் மாநில அளவில் தோ்வு பெற்ற 20 மாணவா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரமும், தேசிய அளவில் வெற்றி பெற்ற 3 மாணவா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
புதுவை கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அதன் இயக்குநா் பி.டி.ருத்ரகௌடு, இணை இயக்குநா் சிவகாமி ஆகியோா் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகள், சான்றிதழ்களை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...