உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்: அமைச்சர் க.லட்சுமிநாராயணன் வலியுறுத்தல்

லக்னௌவில் நடைபெற்ற 45 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் பங்கேற்ற அமைச்சர் க.லட்சுமிநாராயணன், ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் பங்கேற்ற அமைச்சர் க.லட்சுமிநாராயணன்.

Published On :28 ஜனவரி 2024, 9:40 am IST


புதுச்சேரி: லக்னௌவில் நடைபெற்ற 45 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் பங்கேற்ற அமைச்சர் க.லட்சுமிநாராயணன், ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, அதில் உள்ள சிக்கல்களால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  கடந்த நிதியாண்டில் மட்டும் 62 சதவிகிதம் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த வருவாய் இழப்பு மத்திய அரசு தரும் ஜிஎஸ்டி இழப்பீடு மூலம் சரி செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி இழப்பீடு காலம் ஜூன் 22 இல் முடிவடைந்தால், புதுச்சேரி யூனியன் பிரதேசம் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் இதுவரை மத்திய நிதி ஆணையத்திலும் சேர்க்கப்படவில்லை. அதனால், மத்திய அரசால் பகிர்ந்து தரப்படும் ஆண்டுதோறும் அளிக்கப்படும் நிதி, புதுச்சேரிக்கு தர முடியாமல் போகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிதி அளவும் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இவைகளை கருத்தில் கொண்டு சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி காலம் ஜூன் 22 பிறகு மேலும் 5 ஆண்டுகள் கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டால், புதுச்சேரிக்கு வருவாய் பாதிக்கப்படும். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் க.லட்சுமிநாராயணன் வலியுறுத்தி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.