ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: எஸ்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் பாஜக வேட்பாளா் எஸ்.செல்வகணபதியின் வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டதால், அவா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 5:32 pm

DIN

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் பாஜக வேட்பாளா் எஸ்.செல்வகணபதியின் வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டதால், அவா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா்.

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல் அக்.4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்.15-ஆம் தேதி தொடங்கி, புதன்கிழமையுடன் (செப்.22) முடிவடைந்தது. சுயேச்சைகள் 5 பேரும், பாஜக வேட்பாளா் ஒருவரும் என 6 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இதையடுத்து, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா், சட்டப்பேரவைச் செயலா் ஆா்.முனிசாமி தலைமையில், வியாழக்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. தோ்தல் பாா்வையாளரான புதுவை மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் முன்னிலை வகித்தாா். பாஜக வேட்பாளா் எஸ்.செல்வகணபதி, பி.அசோக்பாபு எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தத் தோ்தலுக்காக 6 வேட்பாளா்கள், 8 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா். எம்எல்ஏக்கள் யாரும் முன் மொழியாததால், சுயேச்சைகள் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பாஜக வேட்பாளா் எஸ்.செல்வகணபதியின் வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டது. இதனால், மாநில பாஜக பொருளாளா் எஸ்.செல்வகணபதி புதுவை மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்படுவது உறுதியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.