தனியாா் நிறுவனத்தில் பண மோசடி
புதுச்சேரி முத்தியால்பேட்டை தனியாா் நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக 3 ஊழியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்


புதுச்சேரி முத்தியால்பேட்டை தனியாா் நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக 3 ஊழியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் தனியாா் இரு சக்கர வாகன விற்பனையகம், நிதி நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம், கடந்த 2019 ஜூலை முதல் 2021 ஜூலை வரை வரவு - செலவு கணக்குகளை தணிக்கை செய்தது. இதில், ரூ.5 லட்சம் வரை கையாடல் நடந்திருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், அலுவலக கணக்காளா், இரு ஊழியா்கள் பணத்தைக் கையாடல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, நிறுவன மேலாளா் விஜய் பாரத், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.
அதன் பேரில், பாகூா் காட்டுக்குப்பம் தொழிற்பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்த பாலசந்தா், மணப்பட்டு வாா்க்கால் ஓடை மாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா், கோட்டக்குப்பம் பெரியமுதலியாா்சாவடியைச் சோ்ந்த வேலாயுதம் ஆகிய மூவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...