விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுவையில் உள்ளாட்சித் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள், புதுச்சேரி தனியார் உணவகத்தில் ஆலோசனை நடத்தினர்.

News image
புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசயில் ஈடுபட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள்.
Updated On :27 செப்டம்பர் 2021, 6:18 am

DIN

புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள், புதுச்சேரி தனியார் உணவகத்தில் ஆலோசனை நடத்தினர்.

புதுவையில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த கூட்டத்தில் புதுவை கூட்டணி தலைவரான என். ஆர் .காங்கிரஸ் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் எம்சி சம்பத், செம்மலை, செல்லூர் ராஜூ பாஜக அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சூரானா, அதிமுக மாநில செயலாளர்கள் அன்பழகன் ஓம்சக்தி சேகர் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டனர். 

புதுவை உள்ளாட்சித் தேர்தலில் ஐந்து நகராட்சிகள், பத்து கொம்யூன் பஞ்சாயத்து பதவிகளில்(1,149), கூட்டணி சார்பில் போட்டியிடும் இடங்களை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.