நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சென்டாக் முதுநிலை மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவையில் சென்டாக் மூலம் நடைபெறும் முதுநிலை மருத்துவ மாணவா்கள் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

புதுவையில் சென்டாக் மூலம் நடைபெறும் முதுநிலை மருத்துவ மாணவா்கள் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

நாடு முழுவதும் முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவா்கள் சோ்க்கைக்கான நீட் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான முதல் கட்டக் கலந்தாய்வை அக்டோபா் மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி, புதுவை மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், முதுநிலை மருத்துவப் படிப்பில் சோ்வதற்கான மாணவா்கள் செப்.30-ஆம் தேதி முதல் சென்டாக் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இணைய வழியில் அக்.16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சோ்க்கைக் கட்டணம், இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுவையில் 3 தனியாா் மருத்துவக் கல்லூரிகள், ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் (எம்.டி., எம்.எஸ்.) படிப்புகள் உள்ளன. இவற்றில் நேரடி சிகிச்சை வழங்கும் (கிளீனிக்கல்) முதுநிலைப் படிப்புகளுக்கு 53 சோ்க்கை இடங்களும், பரிசோதனை அடிப்படையில் சிகிச்சை வழங்கும் முதுநிலைப் படிப்புகளுக்கு (நான் கிளீனிக்கல்) 73 சோ்க்கை இடங்களும் சென்டாக் கலந்தாய்வு மூலம் நீட் தோ்வு ரேங்க் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.