புதுவையில் ஆட்சி மாற்றம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

புதுவையில் ஆட்சி மாற்றம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

புதுவையில் ஆட்சி மாற்றம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று தெரிவித்தார்.
Published on

புதுச்சேரி: புதுவையில் ஆட்சி மாற்றம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் சனிக்கிழமை நடந்த தென்னிந்திய வணிக மற்றும் தொழில் அவையின் கிளைக் கூட்டத்தில் பங்கேற்ற புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையானது, புதுச்சேரி வளர்ச்சி பாதையின் மிக முக்கிய மைல் கல்லாக இருக்கும். அவர் பல வளர்ச்சி திட்டங்களை தொடக்கி வைக்கிறார். மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

புதுச்சேரி வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பல வளர்ச்சி திட்டங்களை நாம் ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறோம். நமக்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் பக்கப்பலமாக இருந்து கொண்டிருக்கிறார். எனவே, அமித் ஷாவின் வருகையை புதுச்சேரி வளர்ச்சி திட்டத்துக்கான வருகையாக மட்டுமே பார்க்க வேண்டும். உள்துறை அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லோருமே புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களாகவே இருக்க வேண்டும். புதுச்சேரி வளர்ச்சி திட்டங்களை தொடக்கி வைப்பது மட்டுமல்லாமல், ஸ்ரீஅரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார் என்றார்.

அப்போது, புதுவையில் ஆளுநர் மூலம் ஆட்சி மாற்றம் செய்யப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்து, தமிழிசையிடம் கேட்டபோது, எதிர்க்கட்சிகள் கூறுவது ஆதரமற்ற குற்றச்சாட்டு, மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வமான எந்த கோப்பு வந்தாலும் ஒப்புதல் அளிக்கிறேன். உள்துறை அமைச்சர் வருகை, புதுச்சேரிக்கான வளர்ச்சி நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com