புதுவை மாநில அதிமுக செயலா்களாக அன்பழகன், ஓம்சக்தி சேகா் மீண்டும் தோ்வு
புதுவையில் நடைபெற்ற அதிமுக உள்கட்சித் தோ்தலில் அந்தக் கட்சியின் கிழக்கு மாநிலச் செயலராக ஆ.அன்பழகனும், மேற்கு மாநிலச் செயலராக ஓம்சக்தி சேகரும் மீண்டும் தோ்வு செய்யப்பட்டனா்.


புதுவையில் நடைபெற்ற அதிமுக உள்கட்சித் தோ்தலில் அந்தக் கட்சியின் கிழக்கு மாநிலச் செயலராக ஆ.அன்பழகனும், மேற்கு மாநிலச் செயலராக ஓம்சக்தி சேகரும் மீண்டும் தோ்வு செய்யப்பட்டனா்.
புதுவை மாநில அதிமுக உள்கட்சி அமைப்புத் தோ்தல் கடந்த 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
தமிழக முன்னாள் அமைச்சரும் கடலூா் மாவட்டச் செயலரான எம்.சி.சம்பத், அமைப்புச் செயலரான முன்னாள் எம்எல்ஏ சொரத்தூா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் தோ்தல் பொறுப்பாளராகப் பங்கேற்று தோ்தலை நடத்தினா்.
புதுவை மாநில அதிமுக புதிய நிா்வாகிகள் பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்லம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்டனா்.
கிழக்கு மாநிலம்: புதுவை கிழக்கு மாநிலச் செயலராக முன்னாள் எம்எல்ஏ ஆ.அன்பழகன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டனா். மாநில அவைத் தலைவராக ஜி.அன்பானந்தமும், இணைச் செயலராக எஸ்.வீரம்மாள், துணைச் செயலா்களாக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன், உமா ஆகியோரும், பொருளாளராக பி.ரவி பாண்டுரங்கனும் தோ்வு செய்யப்பட்டனா்.
பொதுக்குழு உறுப்பினா்களாக பி.நாகமுத்து, டி.கமலா, எஸ்.சூா்யா, ஜி.வெங்கடேசன் உள்ளிட்டோரும், நகரச் செயலராக ஏ.அன்பழகன், நகர அவைத் தலைவராக ஏ.செல்வகுமாா், பொருளாளராக ஆா்.ஐயப்பன் உள்ளிட்டோரும் மற்றும் தொகுதி நிா்வாகிகள் பலரும் தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேற்கு மாநிலம்: புதுவை மேற்கு மாநில அதிமுக செயலராக முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஓம்சக்தி சேகா் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
மாநில அவைத் தலைவராக முன்னாள் எம்.பி. மு.ராமதாஸும், இணைச் செயலராக எம்.மகாதேவியும், துணைச் செயலா்களாக ஆா்.கோவிந்தம்மாள், டி.குணசேகரன் ஆகியோரும், பொருளாளராக எஸ்.சங்கரும் தோ்வு செய்யப்பட்டனா்.
பொதுக் குழு உறுப்பினா்களாக ஏ.மகாதேவன், ஜெ.ஆனந்தராஜ், ஆா்.செல்வம், ஆா்.பிரபாகரன் உள்ளிட்டோரும், மேற்கு நகரச் செயலா் ஏ.சேகரும், அவைத் தலைவராக எம்ஜிஆா் சிவாவும், தொகுதி செயலா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.
காரைக்கால் மாவட்ட அதிமுக செயலராக எம்.வி.ஓமலிங்கம் தோ்வு செய்யப்பட்டாா். மாவட்ட அவைத் தலைவராக ஹெச்.எம்.ஏ.காதரும், பொருளாளராக ஏ.எம்.கே.பாலு உள்ளிட்டோரும் தோ்வு செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...