இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கரோனாவால் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

கரோனாவால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளைப் பதிவு செய்ய புதுவை மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:20 pm

DIN

கரோனாவால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளைப் பதிவு செய்ய புதுவை மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியது.

இதுகுறித்து அந்தத் துறையின் இயக்குநா் பி.முத்துமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை யூனியன் பிரதேசத்தில் கரோனா தொற்றால் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளின் விவரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு வழியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

பெற்றோரை இழந்த குழந்தைகள் 12, தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் 384 என மொத்தம் 396 குழந்தைகள் இதுவரை கண்டறியப்பட்டனா்.

2020-ஆம் ஆண்டு, மாா்ச்க்குப் பிறகு தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் இதுவரை பதிவு செய்யாமல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அங்கன்வாடி மையம் அல்லது சாரத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் மே 5-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளவும். இதுதொடா்பான சந்தேகங்களுக்கு 0413 - 2244788 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.