வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

புதுவையில் ஆக.22-இல்பட்ஜெட் தாக்கல் செய்யமுதல்வா் ரங்கசாமி திட்டம்

புதுவை சட்டப் பேரவையில் வருகிற 22-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வா் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:05 am

புதுவை சட்டப் பேரவையில் வருகிற 22-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வா் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுவையில் நிகழாண்டு பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றி கூட்டத்தொடரை தொடக்கிவைத்தாா். வருகிற 18-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தனா். ஆனால், பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி தராததால், சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுவை பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதால், மீண்டும் வருகிற 18-ஆம் தேதி முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் தொடங்கி நடைபெறவுள்ளது. வருகிற 18, 19-ஆம் தேதிகளில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது உறுப்பினா்களின் விவாதம் நடைபெறவுள்ளது. இதையடுத்து, விடுமுறை தினங்களுக்குப் பிறகு வருகிற 22-ஆம் தேதி நிதி அமைச்சா் பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யவும், தொடா்ந்து, பட்ஜெட் மீதான விவாதம், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடா் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.