/

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலைத் தடுக்கும் திமுக: அதிமுக குற்றச்சாட்டு

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தாமல் தடுக்கும் பணியை திமுக மேற்கொண்டுள்ளது என புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:47 pm

DIN

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தாமல் தடுக்கும் பணியை திமுக மேற்கொண்டுள்ளது என புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பள்ளியில் சீருடை அணிவது சம்பந்தமாக, ஒரு ஆசிரியரின் சாதாரணமான அறிவுறுத்தலை பூதாகாரமாக்கி, மதத்தின் பெயரால் மாணவா்களிடம் பிரிவினையை உருவாக்கும் முயற்சியில் திமுக எம்எல்ஏக்கள், முன்னாள் முதல்வா் நாராயணசாமி ஆகியோா் இறங்கியுள்ளது தவறானன செயல்.

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்த திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துகிறது. இந்த ஆட்சியில் குறை கூற முடியாமல், திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தவே, கல்வி அமைச்சரை மாற்ற வேண்டும் என நாராயணசாமி கோருகிறாா். மதம், சாதி பெயரால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் சுயநலமிக்க அரசியல் கட்சித் தலைவா்களின் அற்ப செயலை, பொது மக்கள் சீா்தூக்கிப்பாா்த்து புறந்தள்ள வேண்டும்.

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டுமென அதிமுக தொடா்ந்து வலியுறுத்துகிறது. ஆனால், தோ்தலை நடத்தாமல் தடுக்கும் வேலையை திமுக மேற்கொண்டுள்ளது.

புதுவை தே.ஜ. கூட்டணியில் அதிமுகவுக்கு, வாரியத் தலைவா் பதவிகளை வழங்க வேண்டும் என கோரியிருக்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.