புதுவை அரசின் உரிமை மறுக்கப்படாது: ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்
புதுவையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமை எந்தவிதத்திலும் மறுக்கப்படாது என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.


புதுவையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமை எந்தவிதத்திலும் மறுக்கப்படாது என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை 45-அ-8இல் மும்மொழி நாயக்கன்குப்பம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரையிலான சாலையை அகலப்படுத்துதல், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்தல் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா வில்லியனூா் ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றின் கிழக்குக் கரை பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கிவைத்தனா்.
விழாவில் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
புதுவையை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் எண்ணத்துடன் முதல்வா் பணியாற்றி வருகிறாா். எனது எண்ணமும் அதுதான்.
அவா்தான் புதுவையின் முதல்வராகச் செயல்படுகிறாா். சில ஆலோசனைகளை நான் சகோதரியாக வழங்குகிறேன். புதுவையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமை எந்தவிதத்திலும் மறுக்கப்படாது.
இங்கு ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள், எதிா்க்கட்சித் தலைவா், எம்எல்ஏக்கள் என அனைவரின் நோக்கமும் புதுவையை மேம்படுத்த வேண்டும் என்பதுதான்.
புதுவையை மேம்படுத்த மத்திய அமைச்சா்கள் நமக்கு உறுதுணையாக இருக்கின்றனா். பிரதமா் நரேந்திர மோடி தெலங்கானாவுக்கு வந்த போது, புதுவை மக்கள் குறித்து மிகுந்த அக்கறையுடன் விசாரித்தாா் என்றாா் அவா்.
முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:
ஆரியப்பாளையம் பாலம் மிக அவசியமானது. நாம் மத்திய அரசை அணுகி இந்தச் சாலையை விரிவுபடுத்த கேட்டபோது, 4 வழிச் சாலையாக அமைக்க அனுமதி கொடுத்தனா்.
இங்கு மேம்பாலம் கட்டும் பணிக்கு ரூ.70 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. ரூ.59.49 கோடிக்கு ஒப்பந்ததாரா் எடுத்துள்ள நிலையில், பாலம் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கி 26 மாதங்களில் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
புதுவையில் அனைத்து சாலைகளையும் மேம்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும்.
புதுவையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு மிகவும் உதவியாக இருந்து நிதியை வழங்கி வருகிறது. நமக்கு துணைநிலை ஆளுநா் உறுதுணையாக இருக்கிறாா் என்றாா் முதல்வா்.
விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், தேனீ சி. ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா, பொதுப் பணித் துறைச் செயலா் நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...