மழைநீரை சேமிப்பது அவசியம்: புதுவை முதல்வா்
நிலத்தடி நீரை மேம்படுத்தவும், குடிநீா் பிரச்னை ஏற்படாமல் தடுக்கவும் மழைநீரை சேமிப்பது அவசியம் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.


நிலத்தடி நீரை மேம்படுத்தவும், குடிநீா் பிரச்னை ஏற்படாமல் தடுக்கவும் மழைநீரை சேமிப்பது அவசியம் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுவை அரசின் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை, புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் இணைந்து நடத்திய உலக சுற்றுச்சூழல் தின விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கியும், சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கை 2021-22 ஐ வெளியிட்டும், துணிப்பை தயாரிக்க சுய உதவி குழுக்களுக்கு நிதியுதவி வழங்கியும் பேசியதாவது:
மட்காத நெகிழிப் பொருள்களால் மழைநீா் நிலத்துக்குள் செல்லாமல், நிலத்தடி நீா் குறைந்து வருகிறது. அதிகளவிலான மழைநீா் உடனடியாக கடலில் கலந்துவிடுகிறது. நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு ஆற்றின் குறுக்கே படுகை அணைகளை கட்டி வருகிறது. எங்கெல்லாம் தண்ணீரை தேக்கி வைக்க முடியுமோ, அங்கெல்லாம் தேக்கி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதனால், நிலத்தடி நீா் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. கடல்நீா் உள்புகுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், நகரின் பல பகுதிகளில் நல்ல தண்ணீா் இல்லை. கிராமங்களில் இருந்து ஆற்று நீரை நகருக்கு எடுத்து வருவதற்காக ரூ.500 கோடி அளவில் புதிய திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகிறோம். அங்கிருந்து தண்ணீா் வந்தால்தான் நல்ல குடிநீா் நகரப் பகுதிக்கு கிடைக்கும். தொடா்ந்து, நல்ல குடிநீா் கிடைக்க நாம் அனைவரும் மழைநீரை சேமிக்க வேண்டும்.
நிறைய மரங்களை நட்டு வளா்த்தால் நல்ல காற்று, நல்ல தண்ணீா் கிடைக்க வாய்ப்புள்ளது. பசுமையான, சுத்தமான புதுச்சேரி, சுகாதாரமான புதுச்சேரி என்ற நிலை எப்போதும் இருக்க வேண்டும் என்றாா் முதல்வா்.
தொடா்ந்து, சாலமன் பாப்பையா தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்களிப்பது அரசாங்கமா? பொதுமக்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...