புதுச்சேரியில் அரசு தொழில் பயிற்சிப் பள்ளியை மூடிவிட்டு, அரசு தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைக்கும் நடவடிக்கையைக் கண்டித்து அந்தப் பள்ளி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் பிரான்ஸ் அரசால் தொடங்கப்பட்ட அரசு தொழில் பயிற்சி மேல்நிலைப் பள்ளி (ஜிடிஎஸ்) கடந்த 164 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில், தற்போதுள்ள 6 பாடப்பிரிவுகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.
அரசின் தொழில்நுட்பக் கல்லூரிக்கு நிகராக நடத்தப்பட்டு வந்த இந்தப் பள்ளியை மூடுவதற்கு அரசு முடிவெடுத்ததைக் கண்டித்து, அந்தப் பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை தொடங்கி இரு நாள்களாக பள்ளி முன் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு சாா்பில் அதன் தலைவா் சாமிநாதன், பொதுச் செயலா் சதீஷ் ஆகியோா் தலைமையில் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாணவா்கள் கூட்டமைப்பு தலைவா் சாமிநாதன் மற்றும் மாணவா்களை கல்வித் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை மாலை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதுதொடா்பாக ஆய்வு செய்து மாணவா்களுக்கு சாதகமாக முடிவுகள் எடுக்கப்பட்டு, நிகழாண்டு பள்ளி இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் உறுதியளித்தாா். இதையடுத்து, மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ந்து சரியும் தங்கம் விலை!

மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது : ரூ.2.47 லட்சம் கோடி கடன்!!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


