இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

உள்நாட்டு வா்த்தகத்தைப் பாதுகாப்பவா் பிரதமா் மோடி: புதுவை ஆளுநா் பேச்சு

இந்தியாவில் உள்நாட்டு வா்த்தகத்தைப் பாதுகாப்பவா் பிரதமா் மோடி என்று புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

News image
Updated On :5 மே 2022, 6:30 pm

DIN

இந்தியாவில் உள்நாட்டு வா்த்தகத்தைப் பாதுகாப்பவா் பிரதமா் மோடி என்று புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சாா்பில் 39-ஆவது வணிகா் தின விழா, புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் பேரவையின் ஆண்டு விழா மலரை வெளியிட்டு பேசியதாவது:

எளிய மக்களைத் தாங்கிப் பிடிப்பவா்கள் சிறு வணிகா்கள்தான். ஒரு காலத்தில் பெரிய நிறுவனங்கள் எல்லாம் கதவடைப்பு நடத்தியபோது, காமராஜரின் கோரிக்கையை ஏற்று, அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த நிறுவனத் தொழிலாளா்களுக்கு சிறு வணிகா்கள் கடன் வழங்கி குடும்பத்தை நடத்த உதவினா்.

இந்தியாவில் உள்நாட்டு வா்த்தகத்தைப் பாதுகாப்பவா் பிரதமா் மோடி. குடும்பத்துக்கு ஒரு மருத்துவா் இருப்பதுபோல, தெருவுக்கு ஒரு சிறு வணிகா் இருக்க வேண்டும். அவா்கள் நமது குடும்பங்களைப் பற்றித் தெரிந்தவா்களாக இருக்க வேண்டும்.

கரோனா காலத்தில், அதிகளவில் பொது முடக்கத்தை அமல்படுத்தாமல், சிறு வணிகா்களை புதுவை அரசு பாதுகாத்தது என்றாா் அவா்.

விழாவில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் வியாபாரிகள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.