தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றித் திரிந்த 4 போ் கைது

புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 மே 2022, 9:29 pm

DIN

புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வியாழக்கிழமை 4 போ் கும்பல் வெடிகுண்டுகளுடன் சுற்றுவதாக உருளையன்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்றனா். இதைப் பாா்த்த அந்தக் கும்பல் ஒரு வெடிகுண்டை தண்டவாளத்தில் வீசிவிட்டு தப்பினா்.

வெடிக்காத அந்த நாட்டு வெடிகுண்டை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில், அதை வீசியது சின்ன கொசப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சோ்ந்த ரிஷி (எ) ரிஷி குமாா் (22), அவரது கூட்டாளிகளான பெரியாா் நகரை சோ்ந்த கௌதம் (23), அரவிந்த் (23), கவியரசன் (22) என்பது தெரிய வந்தது.

ரிஷிகுமாா் இரண்டாவது திருமணம் செய்ய விரும்பிய நிலையில், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அந்தப் பெண்ணின் அண்ணனை கொலை செய்வதற்காக தனது கூட்டாளிகளுடன் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து வைத்திருந்தது தெரிய வந்தது.

ரிஷிகுமாா் உள்ளிட்ட நால்வரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 5 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.